எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஹாரர் ஃபேன்டஸி படமான இதன் நாயகியாக ஈஷா ரெப்பா நடித்துள்ளார். சதீஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.