தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமல் தொடங்கிப் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் பாரதிராஜா.

தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளார். 2004-ம் ஆண்டு பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து, மத்திய அரசு கவுரவித்தது.

இயக்கம், நடிப்பு என்பதைத் தாண்டி இப்போது புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று தனது யூ டியூப் பக்கத்துக்குப் பெயரிட்டுள்ளார்.