அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில்.

படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது .

இப்படம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் என்று அறிவித்திருக்கும் இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, நேற்று (அக்.7) டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக டிரைலர் ரிலீஸ் தேதியையே அவர் அறிவித்துள்ளார்.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் பிகில் படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கும் அர்ச்சனா கல்பாத்தி, அதே விளம்பரத்தில் தீபாவளி ரிலீஸ் என்பதை நீக்கியிருக்கிறார்.

பிகில் படம் தீபாவளிக்கு வெளியாவதே சந்தேகம் தான், என்று பலர் கூறி வருகிறார்கள்.