டெல்லி: பான்-ஆதார் கார்டு இணைப்புக்கான காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு செய்து  மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவித்தது. பின்னர், அதற்கான காலஅவகாசம் பல முறைநீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக, அதற்காக காலஅவகாம் மேலும் நீட்டிக்கப்பட்டு வந்தது. அதன்படி, செப்டம்பர்  30ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, பான்-ஆதார் கார்டு இணைப்புக்கான காலக்கெடுவை  2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,  கொரோனா வைரஸ் பரவல் சூழலில் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு, பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு செப்டம்பர் 30ம் ேததி முடிவடைய இருந்த நிலையில் அந்தக் காலக்கெடு 2022ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.