மீரட்டில் துப்பாக்கியால் சுட்டுப் பெண் கொலை : வைரலாகும் வீடியோ

Must read

மீரட்

ரு வயதான பெண்ணை பட்டப்பகலில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உத்திரப் பிரதேசம் மீரட் டில் வசிப்பவர் நிச்சத்தர் கவுர் (வயது 60),   இந்தப் பெண் தனது மகன் பல்மேந்திரா (வயது 28) உடன் வசித்து வருகிறார்.    நிலத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு நிச்சந்தர் கவுரின் கணவர் கொல்லப்பட்டுள்ளார்.   இந்த கொலை வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.    இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளான தாயும் மகனும் வழக்கில் எதுவும் கூறக்கூடாது என இவர்களுக்கு அடையாளம் தெரியாத சிலர் மிரட்டல் அளித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தனது பக்கத்து வீட்டு பெண்மணியுடன் பேசிக் நிச்சந்தர் பேசிக் கொண்டிருந்த போது மூவர் அங்கு வந்து சரமாரியாக நிச்சந்தரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்   அவர் உயிரழந்து கீழே விழுந்துள்ளார்   ஒரு நிமிடத்துக்குள் எட்டு முறை அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.   அவர் மகனை அவரை சுடுவதற்கு இரு நிமிடங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் இதே நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அங்கிருந்த சிசிடிவி காமிராவில் நிச்சந்தரை சுடும் காட்சி  பதிந்துள்ளது.   அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இப்போது வைரலாகி உள்ளது.  இது குறித்து காவல்துறையின் கூடுதல் இயக்குனர் குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   மேலும் காவல்துறை அதிகாரிகள் நால்வர் அஜாக்கிரதையாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

[youtube https://www.youtube.com/watch?v=lse5zFTFrAY]

More articles

Latest article