இளம்பெண்களின் படங்களை கொடுத்து, கணவருக்கு வித்தியாசமான முறையில் காதலர்தின வாழ்த்து கூறிய மனைவி…

Must read

லகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 14ந்தேதி) காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் மட்டுமின்றி, கணவன் மனைவியரும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி, தங்களின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு காதலர்களும், காதல் தம்பதிகளும், வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடிய நிலையில், பிரிட்டனில் இளம்பெண் ஒருவர் வித்தியாசமான இளம்பெண்களின் புகைப்படம் கொண்ட தொகுப்பை தனது கணவருக்கு காதலர் தின பரிசாக வழங்கி உள்ளார்.

மனைவியே தனது காதல் கணவருக்கு மற்ற இளம்பெண்களின் படத்தை எப்படி வழங்குவார் என கேட்பது தெரிகிறது. ஆனால், அந்த இளம்பெண்ணின் கணவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமாக மேய்வார்போல் தெரிகிறது. அதில்  காணப்படும் இளம்பெண்களின் போட்டோக்களைக் கண்டு ஜொல்லுவிட்டதுடன், அதற்கு லைக் போட்டு வந்திருக்கிறார்.

அதை சாமர்த்தியமாக அறிந்த அவரது காதல்மனைவி, தனது கணவர் லைக் போட்ட  புகைப்படங்களை எல்லாம் டவுன்லோடு செய்து, ஒன்றிணைத்து, பிரிண்ட் போட்டு,  அதையே, தனது கணவருக்கு காதலர் தின பரிசாக வழங்கி அசத்தி உள்ளார்.

மனைவியின் வித்தியாசமான காதலர் தின பரிசை, ஆவலோடும், ஆசையோடும்  பிரித்துப் பார்த்த கணவருக்கு… என்ன கிடைத்திருக்கும்… இன்ப அதிர்ச்சியா அல்லது பேரதிர்ச்சியா என்பதை வாசகர்களே ஊகித்துக்கொள்ளலாம்..

என்னம்மா யோசிக்கிறாய்க்கப்பா…. 

 

More articles

Latest article