வாலிபால் போட்டி இடைவேளியில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை: வைரலாகும் புகைப்படம்

Must read

வாலிபால் வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் ஓடிவந்து அவரது குழந்தைக்கு பாலூட்டிய உருக்கமான சம்வம் மிசோராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மிசோராமில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் லால்வென்ட்லுயாங்கி என்ற வீராங்கனை கலந்து பங்கேற்றார். வாலிபால் போட்டியில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த லால்வென்ட்லுயாங்கி, வெற்றி இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென இடைவேளி நேரத்தின் போது ஓடிவந்த அவர், உறவினரிடம் இருந்த தன்னுடைய 7 மாதக் குழந்தையை பெற்றுக்கொண்டு, தாய்ப்பால் ஊட்டத்தொடங்கினார்.

பொதுவாக வெளியில் வரும் தாய்மார்கள், இதுபோன்ற சூழலில் புட்டிப்பால் அல்லது பிஸ்கெட் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுவர். ஆனால் லால்வென்ட்லுயாங்கி தனக்கென வேலை இருந்தபோதும், குழந்தைக்கு தாய்ப்பால் தான் ஊட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மிசோராம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா, “தாய்ப்பால் அளிக்கும் வீராங்கணைக்கு எனது சல்யூட்” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article