காட்மண்டு

நேபாளத்தில் நடந்து முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்கள் வென்றுள்ளது.

நேபாள நாட்டின் காட்மண்டு மற்றும் பொக்காரா நகரங்களில் 13 ஆம் தெற்காசிய விளையாட்டுப் போட்டி கடந்த ஒன்றாம் தேதி முதல் நடந்தது.   இந்த போட்டிகளில் 7 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துக் கொண்டனர்.   கடந்த 10 நாட்களாக நடந்த  இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்த போட்டியின் முடிவில் இந்தியா 174 தங்கம், 93 வெளி மற்றும் 45 வெண்கலம் என 312 பதக்கங்களை வென்றுள்ளது.  கடந்த 1984 ஆம் ஆண்டு இந்த போட்டி தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்தே இந்தியா மொத்த பதக்க எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.  இந்த வருடம்  அதிக தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

நேற்று நடந்த நடண்டஹ் நிறைவு விழா நிகழ்வில் அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர்.  இந்த விழாவில் சுமார் 7000க்கும் அதிகமான கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.   இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.  விழா முடிவில் அடுத்ததாக இந்த போட்டியை நடத்த உள்ள பாகிஸ்தானிடம் தெற்காசிய விளையாட்டுக் கொடி அளிக்கப்பட்டது.