உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராம்நகர் கர்ஜியா கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர் புலி வருவதை உணர்ந்து தொடர்ந்து முன்னோக்கி செல்வதை நிறுத்தினார்.

இதனால் சாலையின் குறுக்கே ஓடிய புலியிடம் சிக்காமல் தப்பித்தார் இந்த காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விறகு சேகரிக்க சென்ற பெண் ஒருவரை புலி அடித்துக் கொன்ற நிலையில் இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.