மும்பை: வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி  தொடங்கி நடைபெற்றது., இந்தகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி ) வெளியிடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ச ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், சந்தை கணிப்புகளுக்களுக்கு இணங்க தனது  தலைமையில் நாணய கொள்கை குழு கூட்டத்தில்  ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 6.5 சதவீதமாக தொடரி முடிவு செய்யப்பட்டு உள்ளது என  அறிவித்தார். ஏற்கனவே ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயரத்தாத நிலையில் டிசம்பர் மாதமும் இதில் இணைந்துள்ளது.

இதனால் ரீடைல் வங்கி வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை அடிப்படையாக வைத்துத் தான் வங்கிகள் தனது கடன் சேவைக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் வேளையில் தற்போதைய  6.5 சதவீத ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது கடன்காரர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதாவது,  வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகதம் உயர வாய்ப்பு இல்லை. மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ தொகையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

தொடர்ந்த பேசிய ஆர்பிஐ கவர்னர் இக்கூட்டத்தில் நாணய கொள்கை மூலம் நாட்டின் பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும்,   டிசம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளது எனவும்  தெரிவித்தார்.

2024 ஆம் நிதியாண்டின் பணவீக்க டார்கெட் அளவான 5.4 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமில்லாமல் அறிவித்த ஆர்பிஐ, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை முந்தை 6.5 சதவீத அளவீட்டில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாகக் குறைக்கும் இலக்கை இன்னும் அடையவில்லை எனவும்  என கூறியவர், இதேபோல் டிசம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் உயர்ந்தால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.