பாட்னா:

முஸ்சபார்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து  சீரழித்த விவகாரம் தொடர் பான வழக்கில், பீகார் முதல்வர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்த போக்சோ சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பீகார் மாநிலம் முஸ்சபார்ப்பூர் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி கள் அந்த காப்பகத்தை நடத்தி வருபவர் மற்றும் அவரது நண்பர்கள், காப்பகத்துக்கு நன்கொடை கொடுப்பவர்களால் தொடர்ந்து  பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த காப்பகத்தை நடத்தி வந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பீகார் மாநில அரசு உத்தரவிட்ட நிலையில்,  பீகார் மாநில சமூக நலத்துறை  மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிதிஷ்குமார் அரசில் அமைச்சராக இருந்து வந்த மஞ்சு வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து,  பாட்னாவில் உள்ள மஞ்சு வர்மாவின் வீடுகள் உள்பட அவருக்கு சொந்தமான 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும்  காப்பகத்தை நிர்வகித்து வந்த, பிரஜேஷ் தாக்கூருக்கு சொந்தமான 7 இடங்களிலும்,  அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணை அறிக்கைகள், இந்தவிவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காப்பக மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வகையில், அவர்களுக்கு  மயக்க ஊசி செலுத்தி வந்த மருத்துவர் அஸ்வனி  3 பேர் மீதும், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தொடர்ந்தே, நீதிமன்றம்  பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் சேர்த்துது, முசாபர்பூர் மாவட்ட நீதிபதி தர்மேந்திர சிங் மற்றும் சமூக நல அலுவலர் அதல் பிரசாத் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுட்டுள்ளது.

இது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.