துணைவேந்தர்களை நியமிக்க 5 பேர் கொண்ட குழு! அமைச்சர் அன்பழகன்

சென்னை,

மிழகத்திலுள்ள காலியாக உள்ள 12 பல்கலைக்கழங்களுக்கும் விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகழகம்  உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் கட்டுபாடற்று கிடக்கிறது.

இதுகுறித்து ஏற்கனவே  சமூக சேவகர் பாடம் நாராயணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் நாடு மீன்வள பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பணி யிடமும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், பாரதி யார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடங்களும், திருவள்ள வர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடமும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் டீன் பணியிடமும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

உடனே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரையையும் நியமனம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறும்போது,

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும்,   12 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க 5பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.


English Summary
A group of 5 people to appoint for select vice-chancellors! Minister Anbalagan said