இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கைதியாக பிடிபட்டு பின்னர் இந்தியாவிலேயே செட்டிலானவர் சொந்த நாடு சென்று உறவினர்களைப் பார்த்து திரும்ப அனுமதி கோரி போராடி வருகிறார்.
செப்டுவஜெனரியன் வாங்க் கீ, 1960 ஆம ஆண்டு சீன இராணுவத்தில் சேர்ந்தார். அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கிய இந்திய சீனப் போரில் சீனாவுக்காக இந்தியாவிடம் சண்டையிட்டு 1963 ஆம் ஆண்டு போர் கைதியாக பிடிக்கப்பட்டார். அடுத்த 6 ஆண்டுகளை ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள சிறையில் கழித்தார். அதன்பினர் 1969-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு மத்திய பிரதேச போலீசிடம் ஒப்படைக்கபப்ட்டார். அங்கு அவர் பாலகாட் மாவட்டத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அதன்பின்னர் கடும் முயற்சிசெய்து கடந்த 2013 ஆம் ஆண்டில்தான் அவருக்கு சீன பாஸ்போர்ட்டை அந்நாடு டெல்லியில் உள்ள சீன தூதரகம் மூலம் தந்தது.
தப்போது வாங்க் கீ தனது சொந்த நாட்டுக்கு சென்று தனது உடன்பிறந்தவர்களை சந்தித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி தனது குடும்பத்துடன் இந்தியாவில் வசிக்க விருப்பம் தெரிவித்து அனுமதிக்காக போராடி வருகிறார். இரு நாட்டு அரசுகளும் அவர் வேண்டுகோளுக்கு செவி கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் உள்ளம் உருக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாங்க் கீயின் மகன் விஷ்ணு ஒரு அக்கவுண்ட்டண்ட்டாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனது அப்பாவின் வேண்டுகோள் குறித்து பரிசீலிப்பதாக இந்திய அரசு சொன்ன தகவலை சொல்லி நாங்கள் அதற்காக பொறுமையுடன் காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த 1963 முதல் 2013 வரையில் அவர் இந்தியாவில் இருந்ததற்கான ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.