செல்ல குதிரையின் சிகிச்சைக்கு 30 ஆயிரம் டாலர் செலவழித்த பார்வையற்ற பெண்

Must read

பார்வையற்ற பெண்மணி ஒருவர், தனக்கு வழிகாட்டியாக இருந்துவரும் குதிரையின் சிகிச்சை செலவுக்காக 30,000 டாலர் வரை செலவழித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் பல நாடுகளில் பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக நாய், குதிரைகள் இருந்துவருகின்றன. அமெரிக்காவில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இப்படி நாய்கள் வழிகாட்டியாக இருந்துவருகின்றன.

இந்த வழிகாட்டி பிராணிகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு முன் வழிகாட்டியாக செல்லும்.

இதே போல அமெரிக்க வாழ் பெண்மணியான ஆன் எடி என்ற பார்வையற்றவருக்கும், பாண்டா என்ற குதிரை 14 வருடங்களாக வழிகாட்டியாக இருந்துவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், பாண்டாவுக்கு தீடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.. அதன் குடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாண்டாவுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார் ஆன் எடி. இதுவரை சிகிச்சைக்காக கு 30,000 டாலர் வரை செலவாகியிருப்பதாகவும், இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்ய தான், தயாராக இருப்பதாகவும், ஆன் எடி கூறியுள்ளார்.

செல்லப்பிராணி மீது இத்தனை பாசமா என வியக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

More articles

Latest article