தெஹ்ரான்:

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹாசன் ரூஹானி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மிதவாதியான ஹசன் ரவுஹானி பழமைவாத போட்டியாளரான எப்ராகிம் ரைசியை காட்டிலும் முன்னணி வகிக்கிறார். எனினும் வாக்கெடுப்பில் முறைகேடுகள் உள்ளதாக ரைசி புகார் அளித்துள்ளார்.

பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் ரூஹானிக்கு 14 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளும், ரைசிக்கு 10 மில்லியன் வாக்குகளும் கிடைத்துள்ளன.

இந்த வெற்றியின் மூலம் 68 வயதான ஹாசன் ரூஹானி 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூஹானி அதிபர் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.