பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பிளேக் நோய் மற்றும் பஞ்சம் காரணமாக அந்த ஆட்சியின் முடிவை ஒரு பாக்டீரியா உச்சரிக்க வைத்ததோடு இந்தியர்களை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து வந்தது.

தற்போது ஒரு வைரஸ் மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர விலை பேசி வருகிறது.

இந்த வாரம் டிவிட்டரில் #ResignModi என்ற பதிவு பலரின் பார்வையில் பட்டது. இது கோவிட் தொற்றுநோய் அரசியல் ஆகிவிட்டதன் அறிகுறியாகத் தெரிகிறது என்று தி பிரிண்ட் மின்னிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஓராண்டுக்கு முன் இந்த பேரழிவு தொடங்கிய போது பிரதமர் மிகவும் வலிமையானவராக காணப்பட்டார்.

ஆனால் இரண்டாவது அலையில் தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு உலகளவில் அதிக பாதிப்பை சந்திக்கும் நாடாக இந்தியா மாறியுள்ள நிலையில் பிரதமர் மோடியை மக்கள் நம்புவதற்கோ மன்னிப்பதற்கோ தயாராக இல்லை.

இதை உணர்ந்ததால் தான் என்னவோ தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடேயே உறையாற்றிய பிரதமர் மோடி மக்களின் ஒத்துழைப்பை மட்டும் நாடி தனது பேச்சை முடித்து்கொண்டார்.

1880-90 ம் ஆண்டு வாக்கில் அசைக்க முடியாத ஏகாதிபத்திய ஆட்சியாக விளங்கிய பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை அப்போது தோன்றிய பிளேக் நோய் நடுக்கமுற செய்தது. அப்போது உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

அதில் 1895-96ல் மும்பையில் பரவிய பளேக் நோயை கட்டுப்படுத்த தவறியதற்காக அரசுக்கு எதிராக நடந்த போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடதக்க திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு பால கங்காதர திலகர் மக்கள் தலைவராக உருவெடுத்து போராட்டம் உத்வேகம் பெற்றது.

பஞ்சத்தால் மக்கள் உயிரிழந்த போதும் பிளேக் நோயால் மருத்துவமனைகளில் இடம் கூட இல்லாமல் மடிய நேர்ந்த நிகழ்வு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டமாக உருவெடுத்தது.

வசதியற்ற ஏழ்மை நிலையில் இருந்தவர்களையே பஞ்சம் பதம்பார்த்தது. பிளேக் நோயோ சாதி, மதம், ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி தாக்கி பலிகொண்டது அதுவே அனைவரும் ஓரணியில் திரள காரணமாக இருந்தது.

பாலகங்காதர திலகர் அந்த காலகட்டத்தில் ஒரு மாபெரும் மக்கள் தலைவராக உருவெடுத்ததோடு பின்னாளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் நிலை குலைவதற்கான முன்னெடுப்பை செய்தார்.

ஒரு பாக்டீரியா ஒரு சம்ராஜ்யத்தையே அசைத்து பார்த்தது என்பதற்கு வரலாற்றில் இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

2014 ம் ஆண்டு மோடி பதவி ஏற்றுக்கொண்டதில் இருந்து உணர்ச்சி பூர்வமான உரையை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக மக்களுக்கு வழங்கிவருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பீட்டின் போதும், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுபோன்ற ஒரு தோரணையில் பேசியே மக்களின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்திய மக்கள் அனைவரின் துன்பத்திற்கும் அவர்களது இந்த கீழ்படிதல் உணர்வையே காரணமாக்கினார். கோவிட் விவகாரத்தில் இதை வைத்தே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஊரடங்கு நேரத்தில் தாங்கள் வேலை செய்த நகரமும், அவர்களின் பொருளாதார நிலையும் அவர்களை கைவிட்ட போது, பிரிவினைக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அந்த தொழிலாளர்கள் மீண்டும் புலம் பெயர்தனர்.

அப்படி இருந்தபோதும், இந்த புலம் பெயர் தொழிலாளர்களின் சொந்த மாநிலமான பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெற மோடியால் முடிந்தது என்றால் அது ஊருக்கு ஊர் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றார் போல் பேசி வருவதே காரணம்.

மாநில தேர்தலில் வெற்றிபெறுவதை நோக்கமாக கொண்டு பா.ஜ.க. வினர் மேற்கு வங்கத்தில் முழுமூச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தான், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இடமில்லாமல் மக்கள் தவிப்பதும், பிணங்களை குவியல் குவியலாக எரிக்கப்படும் காட்சிகளுடன் மோடியை பதவி விலக கோரி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது முதல் மோடியின் பிம்பம் தகர்தெறியப்பட்டுள்ளது.

மக்களின் உணர்வுகளை வைத்து ஆதாயம் தேடி வந்த மோடிக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. மக்களை புறக்கணித்து, தேர்தல் வெற்றியை மட்டுமே மையப்படுத்தி செயல்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அரசியல் மாற்றத்திற்கான விதையை விதைத்திருக்கிறது.

தொற்று நோய் பரவி ஓராண்டு ஆன நிலையிலும் அதை திறம்பட கையாள முடியாத நிலையில் இந்த மாற்றம் அதற்கான அரசியலை விலை பேசி வருவது நிதர்சனம்.

நன்றி தி பிரிண்ட்