பாகுபலி, சாஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷியாம். ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் டைரக்ட் செய்கி றார்.
சமீபத்தில் ராதே ஷியாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ரசிகர்கள் இந்த பர்ஸ்ட்லுக்கை கொண்டாடினாலும் பலர் இது பல படங்களின் போஸ்டரின் காப்பியாக இருப்பதாக தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கால் ராதே ஷியாம் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக் கிறது. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும்21 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஷ்வின் பிரபாஸ் 21 படத்தை இயக்குகிறார். வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது. தமிழில் ’கோச்சடையான்’ படம் முலம் அறிமுகமான தீபிகா படுகோனே தெலுங் கில் பிரபாஸ் 21 மூலம் அறிமுகமாகிறார்.

[youtube-feed feed=1]