Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

உங்கள் கட்சிக்கு வர மாட்டேன்… பாஜகவின் அழைப்பை நிராகரித்த சச்சின் பைலட்

Jul 15, 2020

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் காங்கிரசில் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்களால், கட்சிப் பொறுப்பு மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்து, சச்சின் பைலட் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை பாஜகவுக்கு வருமான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவின் அழைப்பை நிராகரித்துள்ளார்  சச்சின் பைலட்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக மூத்த தலைவர் அசோக் கெலாட் உள்ளார். துணைமுதல்வராக இளந்தலைவர் சச்சின் பைலட் இருந்து வந்தார். இரு தலைவர்களுக்கும் இடையே தொடக்கம் முதலே பூசல் எழுந்து வந்த நிலையில், தற்போது, அதை முற்றி, சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், அங்கு ஆட்சி ஆட்டம் கண்டது.

இதையடுத்து,  காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் சச்சின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளாதால், சச்சினை கட்சிப்பதவி மற்றும் துணைமுதல்வர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பைலட்டுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது.  மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘மிகப்பெரிய அடித்தளம் கொண்ட ஒருவர் பா.ஜனதாவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்தால், அவரை அனைவரும் வரவேற்பர். எங்கள் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால், அவர்களை நாங்கள் இருகரம் விரித்து வரவேற்போம். இது வழக்கமான நடைமுறைதான்’ என்று  சூசகமாக அழைப்பு விடுத்தார்.

ஆனால், பாஜகவின் அழைப்பை ஏற்க மாட்டேன் சச்சின் பைலட் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் தலைமை பதவிகளில் உள்ளவர்களின் மனதில் நஞ்சை கலக்கும் வகையில், நான் பாஜகவில் சேர இருப்பதாக சிலர்  கூறுகின்றனர், ஆனால் எந்த சூழ்நிலையிலும்  நான் பாஜகவில் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Post navigation

மானமும் போச்சு.. பணமும் போச்சு’’.. கில்லாடி பிளாக்மெயில் நிஷா
ஆல்கஹால் கலந்த சானிடைசார்களுக்கு 18% ஜி எஸ் டி

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer