மானமும் போச்சு.. பணமும் போச்சு’’.. கில்லாடி பிளாக்மெயில் நிஷா

Must read

மானமும் போச்சு.. பணமும் போச்சு’’.. கில்லாடி பிளாக்மெயில் நிஷா

கர்நாடக மாநிலம் பெங்களூரூ வொய்ட்பீல்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சைமனுக்கு ’’வாட்ஸ் அப்’ மூலம் தோழியாகி இருந்தாள், நிஷா என்ற பெண்.
தான் கேரளாவை சேர்ந்தவள் என்றும், கால்சென்டரில் வேலை பார்ப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டாள், நிஷா.
ஊரடங்கு காரணமாக நண்பர்கள் ஊருக்கு போய் விட்டதால், அறையில் தனியாக தங்கி இருந்த சைமனுக்கு, நிஷாவிடம் இருந்து அடிக்கடி போன் வரும்.
‘’உன்னை நான் ஆடையின்றி பார்க்க விரும்புகிறேன். உன்னை, நீ ’அப்படி’ காட்டினால் நானும் என்னை ’அப்படி’ காட்டுகிறேன்’’ என்று தூண்டில் போட்டிருக்கிறாள், நிஷா.
சைமனும் தனது ஆடைகளை உரித்து, அந்த ‘காட்சியை’’ வீடியோவாக பதிவு செய்து அவளுக்கு அனுப்பினான்.
சில நாட்களாக அவளிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை. போனும் ‘ஸ்விட்ச் ஆஃப்’.
இரு தினங்களுக்கு முன்பு சைமனை போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவன்’’ உனது நிர்வாண வீடியோ என்னிடம் உள்ளது. 50 ஆயிரம் ரூபாய் தராவிட்டால், உன் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’’ என மிரட்டியுள்ளான்.
அதிர்ந்து போன சைமன், பேரம் பேசி 22 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் அந்த ஆசாமிக்கு அனுப்பினான்.
திரும்பவும் அதே ஆசாமி போன் செய்து ‘இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும்’’ என்று மிரட்டியதால், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார், சைமன்.
-பா.பாரதி.

More articles

Latest article