தஞ்சை:
ய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால்,தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக கோவில்களில் பல ஆண்டுகளாக சிலைகள் காணாமல் போனது மற்றும் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக புகார்களை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் நியமிக்கப்பட்டு, ஏராளமான சிலைகளை பல மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மீட்டு வந்தார்.
இவரது பணிக்காலம் ஓய்வுபெற்றதையடுத்து, தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  தஞ்சையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.