Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சினி பிட்ஸ்

நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்…

Jun 1, 2020

சென்னை:

காமெடி நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு புகார் கடிதம் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில்,  சிங்கமுத்து, வடிவேலு உள்பட சில காமெடி நடிகர்கள்  இணைந்த காமெடிகள் கொடிகட்டி பறந்தது. பின்னர் வடிவேலு, சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, காமெடி கூட்டணியும் பிரிந்தது.

இந்த நிலையில்,  நடிகர் மனோபாலா  நடிகர் சிங்கமுத்துவிடம் நடத்திய யுடியூப் பேட்டியின்போது,  சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிவர் வடிவேலு கடந்த மாதம் 19-ம் தேதி  புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ
கையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் வடிவேலுவின் புகார் கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post navigation

மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சூர்யா- கார்த்தி?
நடிகர் விஜயை இயக்கப்போகிறார் ‘கனா’ இயக்குனர் அருண்ராஜா காமராஜ்…

Related Post

சினி பிட்ஸ் தமிழ் நாடு

‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

2026 TN ASSEMBLY ELECTION சினி பிட்ஸ் தமிழ் நாடு

புலி திரைப்பட விவகாரம்: விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கு….

சினி பிட்ஸ் தமிழ் நாடு

நடிகர்களின் சம்பளத்துக்கு செக்: மே 2-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer