சூலையும், நல்ல விமர்சனத்தையும் ஒரு சேர அள்ளிய ’அய்யப்பனும், கோஷியும்’’ என்ற மலையாளப்படம், பல மொழிகளில் ரீ-மேக் செய்யப்படுகிறது.

பிரித்விராஜ், பிஜுமேனன் ஹுரோக்களாக நடித்திருந்த இந்த படத்தை சாச்சி இயக்கி இருந்தார்.
இதன் தெலுங்கு ரீ-மேக்கில் பாலகிருஷ்ணாவும், ராணாவும் நடிக்கிறார்கள்.

இந்தியில், தயாரிக்கும் உரிமையை ஜான் ஆப்ரஹாம் பெற்றுள்ளார்.

‘ஆடுகளம்’ படத்தை தயாரித்த கதிரேசன், இந்த படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளார்.
தனுஷும், விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிப்பதாக கடந்த மாதம் கூறப்பட்டது.

இப்போது, சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் இணைந்து நடிப்பதாக செய்திகள் உலா வருகின்றன.
அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியையும், கோஷி என்ற முன்னாள் ராணுவ அதிகாரியையும் மையமாக கொண்டு இந்த கதை பின்னப்பட்டுள்ளது. ..

– பா.பாரதி