சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம் வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது வங்கி அதிகாரிகளுடன் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
கொரோனாவிலிருந்து குணமடைவோர் தமிழகத்தில் தான் அதிகம் என்று தெரிவித்தவர், கொரோனாவால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.
கொரோனாவிலிருந்து குணமடைவோர் தமிழகத்தில் தான் அதிகம் என்று தெரிவித்தவர், கொரோனாவால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.
தமிழகத்தில் ஊரடங்கால் நலிவடைந்துள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர், விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை வங்கிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.