இரண்டு நாட்களுக்கு முன்பு, திரிசூரில் இருந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன், பூங்கண்ணத்தில் உள்ள தனது நண்பரை சந்தித்து அரட்டை அடித்து கொண்டிருந்துள்ளார்.
நீல நிற சட்டை மற்றும் லுங்கி அணிந்திருந்த அவரை நண்பர் சாதாரணமாக, “ஜெயெட்டா, எனக்காக ஒரு சில போஸ்களைத் தாருங்கள்; நான் உங்கள் புகைப்படங்களை எடுக்க விரும்புகிறேன். ” என கூறியுள்ளார் .
76 வயதான பாடகர் புகைப்படங்களுக்காக “நான் இப்படி போஸ் கொடுக்க மல்யுத்த வீரரா?” என்று பதிலளித்தார். ஆனால் படங்கள் யாருடனும் பகிரப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் போஸ் கொடுத்துள்ளார் . இருப்பினும் நண்பர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது உடலமைப்பு, நடத்தை மற்றும் மீசையை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர் . “எனது நண்பர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த உறவினர்கள், வேளாண் அமைச்சர் வி எஸ் சுனில் குமார் உட்பட பலர் இவரை அழைத்து என்தா இது ஜெயெட்டா? உங்கள் முகத்தின் புகைப்படத்தை யாராவது ஒரு தசையின் உடலில் மாற்றியிருக்கிறார்களா? என விமர்சித்துள்ளனர் .
ஆன்லைனில் அவரை WWE மல்யுத்த வீரர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள், மேலும் சிலர் படங்களில் வில்லன்களாக நடிக்க என்ன தேவை என்று அவரிடம் பரிந்துரைக்கின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில்“நான் எனது வயதிற்கு ஏற்ற எளிய பயிற்சிகளை வீட்டில் செய்கிறேன். பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும், நான் குளிக்க முன் என் உடலில் எண்ணெய் தடவுகிறேன். இது உடலால் உறிஞ்சப்படுவதை உறுதிசெய்து , அரை மணி நேரம் சிட் அப்கள் போன்ற சில பயிற்சிகளை செய்கிறேன் என கூறியுள்ளார்.