நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இதனால் திரைப்படங்களை திரையரங்கங்களில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘83’ திரைப்படத்தை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனம் 143 கோடி ரூபாய்க்கு வாங்கி விட்டதாகவும் விரைவில் ‘83’ படம் ஆன்லைனில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

இந்த தகவல்களில் துளியும் உண்மையில்லை. ஒருவேளை 6 மாதங்களுக்குப் பிறகும் இயல்புநிலை திரும்புவதற்கு தாமதமானாலோ, நிலைமை இன்னும் மோசமடைந்தாலோ நாங்கள் அதுகுறித்து யோசிப்போம் என படத்தை தயாரித்துள்ள ரிலையன்ஸ் எண்டெர்ட்யின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது .