https://twitter.com/iVijayakant/status/1251794512424267778
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார் .
அனைத்து தொழிலாளர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலாத விஜயகாந்த் முடி திருத்தி, ஷேவ் செய்து டை அடித்துவிடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில், அவரது காலில் உள்ள தழும்புகள் எல்லாமே படப்பிடிப்பின்போது அடிபட்டது என கிரீம் தடவிவிட்டபடி பிரேமலதா கூறுகிறார். அதை சிரித்துக்கொண்டே விஜயகாந்த் பார்க்கிறார்.
Patrikai.com official YouTube Channel