நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’
அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை . ஆனால் யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.
நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் போனி கபூருடன் இணைந்து ஜீ ஸ்டுடியோவும் தயாரித்து வந்தது எனவும் , ஆனால், தற்போது இந்த நிறுவனம் படத்திலிருந்து விலகியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார் .
இந்தத் தகவலை முன்வைத்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘வலிமை’ படத்தின் தயாரிப்பிலிருந்து வெளியேறிவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக விசாரித்தபோது, “அப்படி எதுவுமே இல்லை. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரிப்பில் இருக்கிறது” என்று தெரிவித்தார்கள்.
ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வரும் இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.