தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ராய் லட்சுமி .
அதையடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் .

தற்போது சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பாய்சன்’ தொடரின் இரண்டாம் பாகமாகும். இது ஜீ ஆப்பில் வெளியாகியுள்ளது.

விஷால் பாண்டியா இயக்கவுள்ள இந்த வெப்சீரிஸில் ராய் லட்சுமி டாப்லெஸ் உடையுடன் ஹீரோ அப்தாப் சிவதசனியுடன் கட்டியணைத்தபடி நிற்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

பூஜா சோப்ரா, கௌதம் குலாட்டி, தாஹீர் சபீர் உள்பட பலர் நடித்துள்ளனர். இது வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.