
பிரபாஸ் , அனுஷ்கா காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது.
இதற்கு நடிகர் பிரபாஸ் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘சாஹோ’ படம் ரிலீஸுக்கு பிறகு பிரபாஸ் தொழிலதிபரின் மகளை மணக்கப் போவதாக பிரபாஸின் சகோதரி பேட்டி அளித்தார்.
இதனால் பிரபாஸ் அனுஷ்கா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, என்று பார்த்தால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அனுஷ்காவும், பிரபாஸும் அமெரிக்காவில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக இருவரும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக முன்னணி நாளிதல் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel