சினிமாவில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

அரசின் புதிய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, 30 மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புதிய கள்வி கொள்கையை நடைமுறை படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது, என்றும் கூறியிருந்தார்.

பா.ஜ.க பிரமுகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எஸ்.வி.சேகர் தற்போது இதை விமர்சித்துள்ளார்.

புதிய கொள்கையை நடைமுறை படுத்துவதில் அவசரம் காட்ட கூடாது, என்று சொல்வதற்கு சூர்யாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சூர்யா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிறகு வந்து அவர் பேசட்டும். தன் பிள்ளைகள் காபி குடிக்க மாட்டார்கள் என்று பேசும் சிவகுமார் அவர்களை காபி விளம்பரங்களில் நடிக்க கூடாது, என்று சொல்வாரா. ஊருக்கு தான் சுபதேசம், என்று எஸ்.வி.சேகர் காட்டமாகவும் விமர்சித்திருக்கிறார்.