சமீபத்தில் ராதிகா ஆப்தேயின் படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகியது.

தமில் திரையுலகிற்கு கபாலி மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து ‘தி வெட்டிங் கெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் தேவ் படேல், ராதிகா ஆப்தே நடித்திருக்கும் படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகியது.

வலைதளங்களில் வெளியான படுக்கையறை காட்சி குறித்து ராதிகா ஆப்டே, ‘தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நிறைய அழகான காட்சிகள் இருக்கிறது. அந்த குறிப்பிட்ட காட்சி கசிந்து வைரலானது சமூகத்தின் மனநிலையை அப்பட்டமாக காட்டுகிறது. அந்தக் காட்சியில் நானும் தேவ் பட்டேலும் இருக்கிறோம். ஆனால், அதை பகிரும் போது என்னுடைய பெயரை பயன்படுத்தி பகிர்கின்றனர். ஏன் தேவ் பட்டேல் பெயரை பயன்படுத்தவில்லை’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் நடிகையாக நான் பயன்படுத்தும் ஒரு கருவி தான் என் உடல். இது மாதிரியான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை என்று கூறியுள்ளார்.