சென்னை:
ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் குறித்து உத்தேசமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்,
1) வடசென்னை – டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமி மகன்)
2) மத்திய சென்னை – தயாநிதி மாறன் (முரசொலி மாறன் மகன்)
3) தென்சென்னை – தமிழச்சி தங்க பாண்டியன்
4) ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
5) காஞ்சிபுரம் – அண்ணாதுரை
6) அரக்கோணம் தொகுதி – ஜெகத்ரட்சகன்
7) வேலூர் தொகுதி – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
8) தர்மபுரி – மணி செந்தில் குமார்
9) திருவண்ணாமலை – சி.அண்ணாதுரை
10) கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
11) நீலகிரி- ராசா
12) பொள்ளாச்சி – கோகுல் (பொங்கலூர் பழனிச்சாமி மருமகன்)
13) திண்டுக்கல் – வேலுச்சாமி
14) கடலூர் – கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)
15) மயிலாடுதுறை – இராமலிங்கம் (முன்னாள் எம்எல்ஏ)
16) தஞ்சாவூர் – பழனிமாணிக்கம்
17) சேலம் -பிரபு
18) தூத்துக்குடி – கனிமொழி
19) தென்காசி – தனுஷ்குமார் அல்லது பொன்ராஜ்
20) திருநெல்வேலி – கிரகாம்பெல் அல்லது ஆரோக்கியஞானவேல்
மேற்கொண்ட நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உத்தேச பட்டியல் மட்டுமே. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப் படும் என நம்பப்படுகிறது.
இவர்களில் பலர் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.