சிவகங்கை:
என்னை தகுதி நீக்கம் செய்து கையெழுத்திட்டால்…. சபாநாயகரின் கை இருக்காது என்று பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு மிரட்டல் விடுத்த டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி ரத்தினசபாபதிக்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற டிடிவி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அறந்தாங்கி எம்எல்ஏவும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான ரத்தின சபாபதி, சபாநாயகர் தனபால், மற்றவர்களை நீக்கியதுபோல, தன்னை நீக்கினால் அவரது கை இருக்காது என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரத்தின சபாபதியை தேடி வந்தனர்.
இதன் காரணமாக, தன்னை கைது செய்து விடுவார்களோ என்று அஞ்சிய ரத்தின சபாபதி எம்எல்ஏ, முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையை தொடர்ந்து, ரத்தின சபாதிபதிக்கு முன்ஜாமின் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டது.