‘வெட்கமில்லாத கூட்டணி’: அதிமுக, பாஜக, பாமகவை கடுமையாக சாடிய கனிமொழி

Must read

விருதுநகர்:

விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி.யும், மகளிர் அணி தலைவியுமான கனிமொழி, அதிமுக கூட்டணியை வெட்கமில்லாத கூட்டணி என்று கடுமையாக விமர்சித்தார்.

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் என்ற இடத்தில்  திமுகவின் தென்மண்டல மாநாடு  லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்ட நிலையில்  வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக தொண்டர்களின் கூட்டத்தை பார்க்கும்போது,  தளபதி ஸ்டாலின் முதல்வராகி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது என்று மெய்சிலிர்த்தார். இங்கு நாம் மிகச்சிறந்த கூட்டத்தை நாம் கூட்டி இருக்கிறோம், ஆனால்,  சென்னையில் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். அது எப்படிப்பட்ட மக்கள் விரோத கூட்டணி என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், அந்த கூட்டணியில் இணைந்துள்ளவர்கள், ஒரு வாரத்திற்கு முன்புதான் அடித்துக்கொண்டார்கள்…  இப்போது கூட்டணி என்று சேர்ந்திருக்கிறார்கள்… அதுபோல அதிமுகவும்,  மத்திய அரசை விமர்சித்தது  ஆனால்… தற்போது வெட்கமே இல்லாமல் தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளனர், வெட்கமில்லாத கூட்டணி அது  என்று கடுமையாக சாடினார்.

இங்கே குழுமியுள்ள மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது… இது திமுகவின்  வெற்றி விழா கூட்டமாக…  தளபதி ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டாரோ என்ற வெற்றி களிப்பாக கூடியிருக்கி றதோ என்று எண்ண தோன்றுகிறது என்று கூறியவர், வெற்றி என்பது நமக்குதான்.

இவ்வாறு பேசினார்.

More articles

Latest article