வேலூர்
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல் கமலும் காணாமல் போவார் என முதல்வர் கூறியதற்கு விஜயகாந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி, “விஜயகாந்த் கட்சி அமைத்துப் பின் காணாமல் போய் விட்டார். அதே போல கமலஹாசனும் காணாமல் போய் விடுவார்” என கூறினார். இது விஜயகாந்த் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. வேலூரை சேர்ந்த அரியூரில் தேமுதிக பிரமுகரின் இல்லத் திருமணம் இன்று நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துக் கொண்டார்.
அப்போது அவரை சந்தித்த செய்தியாளர்கள் முதல்வரின் விமரிசனத்தைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜயகாந்த், “தேர்தல் வரட்டும். தேர்தலுக்குப் பின் யார் காணாமல் போவார்கள் என்பதை பார்ப்போம்” என காட்டமாக பதில் அளித்தார்.