சென்னை

ன்லைன் பத்திரப்பதிவு குறித்த வழக்குக்கு உடனடியாக பதில் அளிக்கும் படி அரசின் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வது அமுலாக்கப்பட்டுள்ளது.   அரசுத் தரப்பில் இதனால் நேரம் மிச்சப் படும் எனவும் இடைத்தரகர்  முறை அடியோடு அழிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.   இந்நிலையில் அனைத்து பத்திர விவரங்களும் ஆன்லைனில் இல்லை என்பதால் ஆன்லைனில் பத்திரப் பதிவு சிக்கல் உள்ளதாகக் கூறி சென்னையை சேர்ந்த பூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றாத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாரகன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.  மனு தாரர் தரப்பில் கிராம நத்த நிலங்களையும் பட்டா உள்ளிட்ட சரியான ஆவணங்கள் ஆன்லைனில் இல்லாத நிலங்களையும் பதிவு செய்ய இயலவில்லை என கூறப்பட்டது.   மேலும் இது போன்ற குறைபாடுகள் முழுமையாக களையும் வரை நேரடி பத்திரப் பதிவை தொடர வேண்டும் என அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடப்பட்டது.

அத்துடன் ஆன்லைன் பத்திரப் பதிவு முறை இடைத்தரகர்கள் எண்ணிக்கையை அதிகரித்து மேலும் ஊழல் அதிகரித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதத்தில் கூறப்பட்டது.   நீதிபதி கிருபாகரன் இது குறித்து வரும் 12ஆம் தேதிக்குள் அரசு தனது பதிலை அளிக்க வேண்டும் என பத்திரப் பதிவுத்துறை ஐ ஜி க்கு ஆணை இட்டார்.