மும்பை:

துபாயில் மரணம் அமைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு இன்று மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உடல் இன்னும்  இந்தியா வராத நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாடு முழுவதும் இருந்து சினிமா கலைஞர்கள் உள்பட பிரபலங்கள் மும்பையில் குவியத்தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை சென்றிருந்த நிலையில், நடிகர் சங்க தலைவர் நாசரும், அவரது மனைவி கமிலா நாசரும் மும்பை சென்றுள்ளார்.

கடந்த 1980ம் வருடங்களில் ஸ்ரீதேவி நடிகர் சங்கத்தில் செயல் உறுப்பினராக இருந்து குறிப்பிடத்தக்கது.