சென்னை :

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணைய விசாரணை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த ஆணையத்தில் ஜெ.தீபா, சசிகலா,தீபக், அப்பல்லோ மருத்துவர்கள், , முன்னாள் தலைமை செயலாளர், ஜெ.,வின் உதவியாளர், டிரைவர், வீட்டில் வேலை செய்தவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

நேற்று ஆறுமுகசாமி கமிஷன் முன் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜரானார். இவரைத் தொடர்ந்து ஜெ.,வின் கார் ஓட்டுநர் கண்ணன், விவேக் ஜெயராமன், சமையல்காரர் சேகர் ஆகியோர் விசாரிக்கப்பட இருந்தனர்.

இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரத்திற்கு விசாரணை நிறுத்தப்படுவதாகவும், மீண்டும்அடுத்து தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 6 ம் தேதியன்றே இனி மீண்டும் விசாரணை துவங்கப்பட உள்ளது.