தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாளை இன்று தமிழக அரசு கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும்கட்சியான அதிமுக தலைமையகத்தில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையின் உருவர் ஜெயலலிதாவைப்போல இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வளர்மதி போல் இருக்கிறது என்றும், நடிகை காந்திமதி போல இருக்கிறது என்றும் பல்வேறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிரார்கள். இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர், “ஜெயலலிதாவின் சிலையை விமர்சிப்பவர்கள் அவருடைய உண்மையான விசுவாசிகள் அல்ல.. அவருடைய சிலையை விமர்சிக்கும் தகுதியில்லாதவர்கள் கருத்தாகதான் அது இருக்கும்” என்று கடம்பூர் ராஜூ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.