சென்னை:

விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுகவினரும் கலந்து கொள்வார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.