சென்னை,
தமிழகத்தில் புதியதாக அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அறிவித்து உள்ளனர்.
இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த உள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிவித்தபடி புதிய கட்சி தொங்குவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும், மக்களை சந்திக்கும் பயணத்தை தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று கமலின் புதிய கட்சி அறிவிப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ரஜினி, கமலுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். மேலும் செய்தியாளர்கள், இருவரும் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்டதற்கு, அதற்கு பதில் கூறிய ரஜினி, காலம்தான் முடிவு செய்யும் என்று கூறினார்.