மாலதி மைத்ரி

விடுதலைப்புலிகள் பிரபாகரன் இடத்தில் தான் இருந்திருந்தால்,, சிங்களப்பெண்களை கற்பழித்திருப்பேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கவிஞர் மாலதி மைத்ரி முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இருந்து..

“நான் பிரபாகரனின் இடத்திலிருந்திருந்தால் சிங்கள பெண்களின் முலைகளை அறுத்திருப்பேன், அவர்களைக் கற்பழித்திருப்பேன்” சீமான் என்னும் ஆண்குறி ஆயுதக்கிடங்கின் உறுமலைக் கேட்டேன். தமிழர்களின் உரிமையை மீட்க அறிவாயுதத்தையும் போர்தளவாடத்தையும் பயன்படுத்த அவரின் கும்பலுக்கு பயிற்சி அளிக்கிறார் என்று பாமர மக்கள் நினைத்திருப்பார்கள். பிரபாகரன் பேனருக்கு கீழேயே ஒரு தம்பி தமிழச்சியுடன் இப்படியான பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோ முன்னர் உலவியது. இந்த லேட்டஸ்டு வீடியோ ஆண்குறிகளை ஆயுதமா எப்படிபயன்படுத்துவதென தனது தம்பிகளுக்கு செயல்முறைப் பயிற்சி அளித்தது உண்மையென உறுதிப்படுத்துகிறது.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்து இப்பேச்சைக் கேட்டிருந்தால் சீமான் உச்சரித்த ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தோட்டாவால் பதிலளித்திருப்பார்.

சீமான்

சீமான் மனிதனாக இருக்கவே அருகதையில்லாத சைக்கோ. இந்த சைக்கோ
தமிழரின் தலைவனாக ஆசைப்படுவதும் பின்னால் மனநோயாளிக் கூட்டத்தை வளர்ப்பதும் தமிழ் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வெறிப்பிடித்த நாய்களுக்கு அடுத்த ஆட்கள் தன் வீட்டு ஆட்கள் என்ற பேதமெல்லாம் தெரியும் அளவுக்கு அறிவிருக்காது.
இவர்கள் வீட்டு பெண்கள் எப்படி இதையெல்லாம் பொறுத்துக்கொள்கிறார்கள்.

சீமானின் கற்பழிப்பு சேனைகள்,
அனுதாபிகள், சிலீப்பர் செல்கள் என் நட்பு வட்டத்திலிருந்தால் வெளியேறிவிடுங்கள்.

இந்த சைக்கோ தமிழ் தேசிய விடுதலை அரசியல் பேசும் அனைவருக்கும் அவமானத்தையும் தலைகுனிவையும் வரலாற்றில் உருவாக்கிவிட்டான்.