சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் உட்பட 21 பேர் மீது குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு மறு உத்தரவு வரும் வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில் ஸ்டாலின் குட்கா தடையின்றி விற்கப்படுவதாக கூறி தான் கையோடு எடுத்துச் சென்ற குட்கா பொட்டலத்தையும் காட்டினார்.  தடை செய்யப்பட்ட பொருளை சட்டசபைக்கு எடுத்து வரக் கூடாது என சட்டமன்ற உரிமைக் குழுவிடம் புகார் செய்ததன் பேரில் உரிமைக் குழு ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க உத்தேசித்திருந்தது.

இந்த உரிமை மீறல் குறித்து ஸ்டாலின் உட்பட 21 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் மேல் உரிமைக் குழு நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதி மன்றத்தில் 21 உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கில் 21 பேர் மீது மறு உத்தரவு வரும் வரையில் சட்டமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  வழக்கு அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.