சென்னை,

முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கில் வரும் 20ந்தேதிக்குள் ஆளுநரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க ஆளுநரின் செயலாளர் மற்றும் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அதுவரை பெரூம்பான்மை நிரூபிக்க உத்தரவிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு சபாநாயகர் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைவதால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரியும், அரசு பெரும்பான்மை நிருபிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் இன்றைய காலை விசாரணையின்போது, , 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுமா என்று  கேள்வி எழுப்பிய நீதிபதி, அதுகுறித்து விளக்கம் கேட்டு மதியம் 2.15 மணிக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தர விட்டார்.

அதைத்தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்று வந்த விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,  எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்-றும், அதற்கான பணிகள் தொடங்கி உள்ளனர்.  சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என்று கூறினார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்குடன் இதைச் சேர்க்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

அதைடுத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு  வரும் புதன்கிழமை (20ந்தேதி)  வரை நடத்த தடை விதிக்கபடுவதாகவும்,  அதற்குள்  ஆளுநரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க ஆளுநர் செயலாளர் மற்றும் சபாநாயகருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையை வரும் 20ந்தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.