சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய குமரி அனந்தன் மோடியின் உடை குறித்து விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிக பா.ஜ. தலைவரான தமிழிசை, தனது தந்தைக்கு  மனசாட்சிப்படி பேசவேண்டும்  அட்வைஸ் கூறி உள்ளார்.

சென்னையில நேற்று நடைபெற்ற  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, காங்கிரஸ் மூத்த தலைவர்  குமரிஅனந்தன், “குஜராத்தில்தான் காந்தியும் பிறந்தார். மோடியும் பிறந்தார். காந்தி நாட்டுக்காக சட்டை அணியாமல் நடந்தார். மக்களுக்காக வாழ்ந்தார், ஆனால் தற்போதைய பிரதமர் மோடியோ  ஒரு நாளைக்கு விலை உயர்ந்த 5 உடைகள் மாற்றுகிறார் என்று விமர்சித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய திராவிடர் கழகம் தலைவர் வீரமணி, காங்கிரஸ் மூத்த உறுப்பினர்   “குமரிஅனந்தன் மக்களுக்கு தமிழை சொல்லிக் கொடுத்த அளவுக்கு,  தமிழிசைக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கவில்லை போலும் என்று கிண்டலடித்தார். அதன் காரணமாகவே தமிழகத்தில்  நீட் தேர்வினால் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்ற தகவலை தவறுதலாக கூறி வருகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தனது தந்தை மற்றும் திராவிடர் கழக தலைவருக்கும் தமிழக பா.ஜ. தலைவருக்கும் பதில் அளித்து தமிழிசை கூறியதாவது,

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது தந்தை (குமரிஅனந்தன்) கதர் ஆடையை தவிர வேறு ஆடை அணிவதில்லை என்பதை நினைவு கூர்ந்தார். மேலும், மோடி ஆட்சிக்கு வந்த பிறகே கதர் ஆடைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு கதர் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.

தற்போது  புல்லட் ரெயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு குஜராத் வந்துள்ள ஜப்பான் பிரதமரை, காந்தியின் சமாதிக்குதான் பிரதம்ர் அழைத்துச்சென்றார் என்றும், அப்போது மோடி கதர் ஆடையைத்தான் அணிந்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரதமரின் உடை விசயத்தை அரசியலாக்கி  கொச்சைப்படுத்துவது சரியல்ல என்ற தமிழிசை, தனது தந்தை ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற நிலையில் பேசி இருக்கலாம்,  ஆனால் அவர்  மனசாட்சிப் படி பேச வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

மேலும், பெரியவர் வீரமணி எனக்கு கணக்கு தெரிய வில்லை என்று பேசியிருந்தார். உண்மையில் எனக்கு கணக்கு தெரியாது, அதனால்தான்   2ஜியில் எத்தனை பூஜ்யங்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அதுபோன்ற கணக்கு எனக்கு சொல்லித்தரப்பட வில்லை.

ஆனால் எனக்கு வேறொரு கணக்கு தெரியும் என்றும், டந்த ஆண்டு நீட் தேர்வுக்காக பலர் சி.பி.எஸ்.சி. நோக்கி சென்றார்கள் என்ற அவர், கடந்த ஆண்டு அரியலூரில் 2 மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவத்தில் சீட் கிடைத்தது. ஆனார், தற்போது 21 பேருக்கு இடம் கிடைத்து உள்ளது என்றும், திருவாரூரில் 28 பேருக்கும்,  25 மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக இடம் கிடைத்துள்ளது என்றார்.

இதன் காரணமாக  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் மறந்தோ அல்லது மறைத்தோ எதிர்க்கட்சியினர் தப்பு  கணக்கு போடுகிறார்கள். அவர்களை மக்கள் திருத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.