கல்கத்தா,
பாபா ராம்தேவ் தயாரிப்பான பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் பாதுகாப்பற்றது என்று சோதனை முடிவு தெரிவித்து உள்ளது.
எனவே நாடு முழுவதும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ்-ஐ தடை செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ் பல வகையான உணவு பொருட்களை தயாரித்து பதஞ்சலி பெயரில் விற்பனை செய்து வருகிறார். இவைகள் அனைத்தும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்டது, உடலுக்கு உறுதியானது என்றும் விளம்பரப்படுத்தி வருகிறதார்,.
இந்நிலையில், பதஞ்சலியின் தயாரிப்பான ஆம்லாஜூஸ் (நெல்லிக்காய் ஜூஸ்) மீது புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து ’ஆம்லா ஜூஸ்’, ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, ஆம்லா ஜுஸ் பாதுகாப்பற்ற தயாரிப்பு என்று ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த ஆம்லா ஜூஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ராணுவ கேன்டீனில், முதல் கட்டமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஆம்லா ஜூஸ் குறித்த குற்றச்சாட்டுகளை பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். இது மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பானம் என்பதால், இதை மற்ற குளிர்பானங்களைச் சோதனைசெய்யும் அளவீடுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்வது முறையாகாது’ என பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தயாரிப்பை ஆயுர்வேத அமைச்சகம் சோதிக்க வேண்டும் என பதஞ்சலி நிறுவனம் முறையிட்டுவருகிறது.
ஆனால், ’கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க பொது சுகாதார ஆய்வகத்தின் முடிவின்படி, இந்தத் தயாரிப்பு உடல்நலத்துக்கு பாதுகாப்பற்றது’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் அறிவித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையின்படி, பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸ்’ பாதுகாப்பற்றது. ஆகவே அது தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பதஞ்சலி தயாரிப்பில் மாட்டு கோமியம் சேர்க்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது, அதைத்தொடர்ந்து, நெய், ஆட்டா, நூடுல்ஸ் போன்றவைகளிலும் புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.