எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தகர்க்கப்படும்! ரெயில்வே அதிகாரிக்கு மாவோயிஸ்ட் மிரட்டல்!

Must read

சென்னை,

சென்னையில் இருந்து புறப்படும்  4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெடிகுண்டு வைக்கப்படும் என ரெயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் வந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய அதிகாரிக்கு, மாவோயிஸ்ட் பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று எழுதப்பட்டு உள்ளது.

 

சென்ட்ரலில் இருந்து செல்லும்  நீலகிரி எக்ஸ்பிரஸ்,  மங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் என்னை எழும்பூரில் இருந்து புறப்படும் முத்து நகர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.

மேலும்  நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணம் அருகே வரும்போது வெடி வைத்து தகர்க்கப்படும் என்றும், தூத்துக்குடி , நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் அருகே வரும்போது தகர்க்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மிரட்டல் கடிதத்தில் 9 செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் கடிதம் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

More articles

Latest article