சத்தியமங்கலம்:

மதுரை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., முத்துச்சாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டில் மதுவிலக்கு தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு முத்துசாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து அவருக்கு சத்தியமங்கலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறபித்து உத்தரவிட்டுள்ளது.