
சென்னை,
எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் துறைமுகம் மூலம் இறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக எண்ணூர் துறைமுகம் அருகே சரக்குகளை ஏற்றி இறக்க பல கப்பல்கள் எப்போதும் அணிவகுத்து நிற்கும்.
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் எண்ணெய் ஏற்றி வந்த கப்பலுடன் மற்றொரு சரக்கு கப்பல் மோதி உள்ளது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்திற்குள் நுழைய முட்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எண்ணை கப்பலில் இருந்து எண்ணை கொட்டி கடலில் கலந்து வருகிறது. தற்போது அந்த எண்ணையை அகற்றும்பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இரண்டு கப்பல்களும் மீட்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கப்பல்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]