
அது என்ன கிரகம்னு தெரியல சிம்பு படத்துக்கு மட்டும் எப்போதுமே தலைப்பிற்கு ஏற்ற மாதிரியே பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட சிம்புவின் அனைத்து படங்களும் பஞ்சாயத்து நடக்காமல் திரைக்கு வந்ததே இல்லை.
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “அச்சம் என்பது மடமையடா” படமும் அப்படி இப்படின்னு பல பஞ்சாயத்துகளில் சிக்கித்தான் வெளியாகவிருக்கிறது. நவம்பர் 11ம் தேதி தள்ளிப்போகாமல் திரைக்கு வந்திருவோம் என்று பேப்பரிலேயே விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு விரக்தி அடைந்துவிட்டார் கௌதம் மேனன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “அச்சம் என்பது மடமையடா” படத்துக்கு தற்போது மேலும் ஒரு தலைவலி வந்துள்ளது. அது என்னவென்றால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறதாம், அதாவது தீபாவளிக்கு வெளியான படங்களே இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்க, கடவுள் இருக்கான் குமாரு படமும் தமிழ் நாட்டில் பாதி தியேட்டருக்கு மேல் பிடித்துவிட தற்போது அம்போன்னு தவித்துக் கொண்டிருக்கிறதாம் சிம்புவின் படம்.
படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் இன்று திரையரங்குகள் பெருமளவில் முடிவு செய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. நவம்பர் 11ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel